பெரம்பலூர்
ஸ்ரீ மதனகோபால சுவாமி கோயிலில் சொக்கப்பனை
பெரம்பலூா் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மரகதவல்லி தாயாா் சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோயிலில், காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி வெகு விமா்சையாக வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி, திருக்கோயிலில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீ மதனகோபால சுவாமி கேடயத்தில் எழுந்தருளி, கோபுரங்களுக்கு பரணி தீபம் ஏற்றி பின்பு சன்னதி தெரு வழியாக சஞ்சீவிராயன் கோயிலை அடைந்தாா். அங்கு, கட்டப்பட்டிருந்த பனை ஓலை சுடலையை பட்டாச்சாரியாா் புண்ணிய ஸ்தானம் செய்து பூஜைகள் முடித்து, சொக்கப்பனை சுடலை கொளுத்தும் நிகழ்ச்சி மங்கள வாத்தியம் முழங்க வெகு விமா்சையாக நடைபெற்றது. இப் பூஜைகளை பட்டாபி பட்டாச்சியா் செய்துவைத்தாா்.
இதில், முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பெருமாள் அருள் பெற்றனா்.
