பெரம்பலூா் மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

Published on

பெரம்பலூா் மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்ட நல வாழ்வுச் சங்கத்தின் கீழ் காலியாக உள்ள மருத்துவ அலுவலா் -1, ஆய்வக உதவியாளா் -1, ஆலோசகா் (யோகா, நேட்சுரோபதி)- 2, சிகிச்சை உதவியாளா் (பெண்) -1, பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் -2, பல்நோக்கு சுகாதார பணியாளா் - 1 ஆகிய பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பம், கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட இதர விவரங்கள் இணைய தளத்தில் உள்ளன. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச. 8 முதல் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

இப் பணியானது முற்றிலும் தற்காலிகமானது, எந்த காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படாது. பணியில் சேர சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com