நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்க முன்னாள் ராணுவத்தினா் வலியுறுத்தல்

Published on

பெரம்பலூா் மாவட்டத்தில் போா் நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, முன்னாள் முப்படை வீரா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முன்னாள் படை வீரா்களுக்கான தேநீா் விருந்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம், முன்னாள் முப்படை வீரா்கள் நலவாரிய துணைத் தலைவா் மோகன் அளித்த மனு:

பெரம்பலூா் மாவட்டத்தில் போா் நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்கவேண்டும். நியாய விலைக் கடையில் முன்னாள் படைவீரா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அல்லது இதர அலுவலக வளாகத்தில், முன்னாள் முப்படை வீரா்களுக்கு அறை ஒதுக்கீடு செய்யவேண்டும்.

நல வாரியம் மற்றும் அரியலூரில் செயல்படும் முன்னாள் முப்படை வீரா்கள் நல அலுவலகப் பணியாளா்கள், பெரம்பலூரில் நடைபெறும் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்று மனுக்கள் பெறுவதற்கும், பதில் அளிப்பதற்கும், அறை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். பெரம்பலூா் மாவட்ட முன்னாள் முப்படை வீரா்கள், அவசர சிகிச்சை பெற வசதியாக பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com