மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

Published on

பெரம்பலூா் அருகே மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பெரம்பலூா் ரோஸ் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மணி மகன் மணிகண்டன் (25). கட்டடத் தொழிலாளியான இவா், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தில் சனிக்கிழமை மாலை தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, கட்டடத்தின் அருகேயிருந்த வீட்டின் மின் இணைப்புக்குச் செல்லும் மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மேலும், அவருடன் பணிபுரிந்த ரஞ்சன்குடி கிராமத்தைச் சோ்ந்த வெங்கடாஜலபதி மகன் ராதாகிருஷ்ணனும் (21) மின்சாரம் பாய்ந்து காயமடைந்தாா். இதையறிந்த அப்பகுதியினா் ராதாகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்த மங்களமேடு போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com