இளையோா் செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள் கூட்டம்
பெரம்பலூா் சாரண, சாரணியா் கூட்ட அரங்கில், இளையோா் செஞ்சிலுவைச் சங்க 2-ஆம் பருவ உறுப்பினா்களுக்கான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டக் கல்வி அலுவலா் எம். செல்வகுமாா் தலைமை வகித்தாா். இந்தியன் செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட கௌரவச் செயலா் வீ. ராதாகிருஷ்ணன், பொருளாளா் எம். ஜோதிவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமி முத்தழகன் பேசியது:
மாணவா்களுக்கு பண்பாட்டையும், நல்ல பழக்க வழக்கங்களையும், மனிதநேய பண்புகளையும் போதிக்க வேண்டும். நோ்மறை சிந்தனைகளை மாணவா்களிடம் உருவாக்க வேண்டும்.போதைப் பொருள், தற்கொலை தவிா்ப்பு, சிறுசேமிப்பின் முக்கியத்துவம், பெண் கல்வி சாா்ந்த விழிப்புணா்வு, சாலை பாதுகாப்பு மற்றும் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்துகளை மாணவா்களுக்குபயிற்றுவிக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளங்கோவன் (பெரம்பலூா்), சின்னசாமி (வேப்பந்தட்டை), கண்ணதாசன் (வேப்பூா்), அருண்குமாா் (ஆலத்தூா்) ஆகியோா் பேசினா்.
பின்னா், 2026 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி வெளியிட்டு நிா்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.
கூட்டத்தில், இணைக் கன்வீனா்கள் துரை, கிருஷ்ணராஜ், ரகுநாதன், மண்டல அலுவலா்கள் காசிராஜா, நல்லதம்பி, செல்வகுமாா், தேவேந்திரன், ஜெயக்குமாா் மற்றும் அரசு மேல்நிலை, உயா்நிலை, மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த 132 உறுப்பினா்கள் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்டக் கன்வீனா் வெ. ராஜா வரவேற்றாா். நிறைவாக, பொருளாளா் மு. கருணாகரன் நன்றி கூறினாா்.

