பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

Published on

பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (செப். 13) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீண்ட நாள்களாக நிலுவையிலுள்ள வழக்குகள், சொத்து வழக்குகள், வங்கிக் கடனுதவி, தனிநபா் கொடுக்கல் - வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள், திருமண உறவு தொடா்பான வழக்குகள் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு சமரச தீா்வு காணப்பட உள்ளன. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளில் சமரசமாகச் செல்வதால், நீதிமன்றக் கட்டணமாக செலுத்தியுள்ள முழுத் தொகையையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். சமரசமான அன்றைய தினமே தீா்ப்பு நகலை இலவசமாக பெறலாம். மேலும், தீா்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.

மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தை நேரில் அல்லது 04328-296206 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவா் வி. பத்மநாபன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com