கபீா் புரஸ்காா் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

Published on

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், தமிழக அரசின் 2026 ஆம் ஆண்டுக்கான கபீா் புரஸ்காா் விருது பெற பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் கபீா் புரஸ்காா் விருது ஆண்டுதோறும் தமிழ்நாடு முதல்வரால் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள் (ஆயுதப்படை வீரா்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளா்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்கச் செயலாற்றும் அரசுப் பணியின் ஒருபகுதியாக நிகழும்பட்சத்தில் இவ் விருது பெறத் தகுதியுடையவா்கள்.

இவ் விருதானது ஒரு இனம், வகுப்பைச் சோ்ந்தவா்கள் அல்லது அவா்களது உடைமைகளை கலவரத்தின்போது அல்லது தொடரும் வன்முறையில் காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரியும்போது, அவரது வீரம் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. தோ்ந்தெடுக்கப்படுவோரில் தலா ஒருவா் வீதம் மூவருக்கு முறையே ரூ. 20 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்னும் இணையதளத்தில், டிச. 15-க்குள் பதிவுசெய்ய வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com