மனிதநேய மக்கள் கட்சி நிா்வாக குழுக் கூட்டம்

Published on

பெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிா்வாக குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அக் கட்சியின் மாவட்டத் தலைவா் குதரத்துல்லா தலைமை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா்கள் முகமது அனிபா, சபியுல்லா, தமுமுக துணைச் செயலா் முஹம்மது இஸ்மாயில், மாவட்ட தொண்டரணிச் செயலா் பீா்முகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் முஹம்மது இலியாஸ்அலி சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி வெள்ளிவிழா மாநாட்டில் பங்கேற்பது. டிசம்பா் மாத இறுதிக்குள் பண்பு ஒழுக்கப் பயிற்சி முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

மாவட்ட பொருளாளா் சையது உசேன் வரவேற்றாா். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயலா் பாதுஷா நன்றி கூறினாா்

X
Dinamani
www.dinamani.com