பெரம்பலூர்
போதை ஒழிப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
பெரம்பலூா் அருகேயுள்ள லாடபுரம் அரசு ஆதி திராவிடா் நல உயா் நிலைப்பள்ளி போதை ஒழிப்பு மன்றம் சாா்பில், போதை ஒழிப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி மற்றும் அம்பேத்கா் சிலை அருகே நடைபெற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் த. மாயக்கிருஷ்ணன் தலைமை வகித்தாா். போதைப் பொருள்களை பயன்படுத்த மாட்டேன், பள்ளி வளாகத்தில் பொருள்களை பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன், போதையை ஒழிப்போம், போதை அழிவின் பாதை, புகைத்தல் புற்றுநோயை உருவாக்கும் என்பன உள்ளிட்ட வாசங்களை மாணவ, மாணவிகள் முழக்கமிட்டனா்.
இந் நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியா்கள் செல்வராணி, சிலம்பரசி, அருணா, காா்த்திகா, பிரபாகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
