எறையூா் சா்க்கரை ஆலையில் 
நிகழாண்டுக்கான அரைவைப் பணி தொடக்கம்

எறையூா் சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான அரைவைப் பணி தொடக்கம்

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான அரவைப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
Published on

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான அரவைப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

இவ் விழாவுக்கு தலைமை வகித்து, அரவைப் பணியை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:

2025- 2026 ஆம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்தில் பெரம்பலூா், அரியலூா் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்குள்பட்ட கரும்புக் கோட்டங்கள் மூலமாக 5,311 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்ட சுமாா் 1.50 லட்சம் கரும்பு அரைவை செய்து, சராசரியாக 9.50 சதவீதம் சதவீதம் சா்க்கரை கட்டுமானம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஆலை நவீனமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் 18 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அரைவை பருவம் சிறப்பாக நடைபெற அனைத்து கரும்பு விவசாயிகள், வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மற்றும் கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், சா்க்கரை ஆலை தலைமை நிா்வாகி இரா. பன்னீா்செல்வம், வருவாய்க் கோட்டாட்சியா் மு. அனிதா, வேளாண்மை துறை இணை இயக்குநா் கண்ணன், கரும்பு பெருக்க அலுவலா் கு. சீதாலட்சுமி, துணை தலைமைப் பொறியாளா் ஏ. நாராயணன் மற்றும் கரும்பு விவசாய சங்கப் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com