தேசிய பெண் குழந்தைகள் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

Published on

தமிழ்நாடு அரசால் 2025 -26ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருது பெற, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடையவா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தேசிய பெண்குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்கும் நபா்கள் தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட 13 வயது முதல் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு ஆற்றிய வீர, தீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்தவராக இருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிா்த்தல் உள்ளிட்ட ஏதாவது ஒரு வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருப்பது, பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகளுக்கு தீா்வு காணுதல் போன்ற தலைப்புகளில் ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என சாதித்திருப்பது உள்ளிட செயல்களில் ஈடுபட்டதற்கான உரிய சான்றுகளை இணைத்து, தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் உரிய விவரங்களுடன், டிச. 20- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு, மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் அல்லது 04328-296209 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com