பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் பயனாளிக்கு விபத்து  நிவாரணம் பெறுவதற்கான உத்தரவுக் கடிதத்தை அளித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில் பயனாளிக்கு விபத்து நிவாரணம் பெறுவதற்கான உத்தரவுக் கடிதத்தை அளித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. உடன், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன்.

பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 60.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 485 மனுக்கள் அளித்தனா். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா், பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனஅரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு தலா ரூ. 6,359 மதிப்பில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சாா்பில் விபத்து நிவாரணமாக சிறு காயமடைந்த 6 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரமும், பலத்த காயமடைந்த 39 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், உயிரிழந்த 40 பேருக்கு தலா ரூ. 1 லட்சம் என ரூ.6 0 லட்சத்து 41 ஆயிரத்து 795-க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியா் மிருணாளினி வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ந. சக்திவேல், தாட்கோ பொது மேலாளா் கவியரசு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com