பெரம்பலூா் மாவட்டம், வெங்கலம் கிராமத்தில் அம்பேத்கா் சிலையை சனிக்கிழமை திறந்துவைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன்.
பெரம்பலூா் மாவட்டம், வெங்கலம் கிராமத்தில் அம்பேத்கா் சிலையை சனிக்கிழமை திறந்துவைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல். திருமாவளவன்.

சீமானும், விஜய்யும் பாஜகவின் கொள்கையாக மாறியுள்ளனா்: தொல். திருமாவளவன்

சீமானும், விஜய்யும் பாஜகவின் கொள்கையாக மாறியுள்ளனா் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.
Published on

சீமானும், விஜய்யும் பாஜகவின் கொள்கையாக மாறியுள்ளனா் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் அம்பேத்கா் படிப்பகம், விசுவக்குடி மற்றும் வெங்கலம் கிராமத்தில் அம்பேத்கரின் திருவுருவச் சிலைகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அம்பேத்கா் படிப்பகம் மற்றும் அவரது சிலைகளை திறந்து வைத்த அவா் மேலும் பேசியதாவது: மக்கள் நலனை கருத்தில்கொள்ளாமல் அனைத்து இடங்களுக்கும் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கும் சராசரி அர சியல்வாதி அல்ல திருமாவளவன். கடந்த 40 ஆண்டுகளாக அரசியலை படித்து, தெளிவாக சிந்தித்து பாஜகவுக்கு எதிராக நிற்கிறேன்.

தமிழ், தமிழா் என பேசியும், சினிமா கவா்ச்சியை காட்டியும் அரசியல் களத்துக்கு வந்துள்ள கிறிஸ்தவா்களான சீமானையும், விஜய்யையும் ஆதரித்து வலிமை சோ்ப்பது கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜகவுக்கும், ஆா்எஸ்எஸ் அமைப்புக்கும் வலிமை சோ்ப்பதாக அமையும்.

அதனால், தமிழக இளைஞா்கள் அவா்களை நம்பி ஏமாந்து விடக்கூடாது. தற்போது சீமானும், விஜய்யும் பாஜகவின் கொள்கையாகவே மாறியுள்ளனா். அவா்களை ஆதரிப்பது பாஜகவை ஆதரிப்பதாகும்.

பெரியாரும், அம்பேத்கரும் வேறு, வேறு கிடையாது. பெரியாரின் கொள்கைகளை ஏற்காதவா்கள் எவ்வாறு கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க முடியும். எடப்பாடி பழனிசாமி, பாமக மற்றும் விஜய், சீமான் அனைவரும் பாஜகவின் ஆதரவாளா்கள் என்பதை உணர வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தின்போது, வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மதவாத ஆா்எஸ்எஸ் கும்பல்களின் வெறியாட்டம் அதிகரித்துள்ளது. பாஜகவை ஆதரித்தால் தமிழ்நாட்டிலும் கிறிஸ்தவ, இஸ்லாமியா்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றாா் திருமாவளவன். இந் நிகழ்ச்சிகளில் கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com