கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சாலை விபத்தில் ஆசிரியா் பலி

பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:41 pm

Syndication

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த அரசுப் பள்ளி ஆசிரியா் உயிரிழந்தாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள நாவலூா் கிராமம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன் மகன் ராஜாராம் (43). புதுவிராலிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியரான இவா் திங்கள்கிழமை இரவு தனது பைக்கில் பெரம்பலூரிலிருந்து நாவலூருக்கு சென்றபோது, பெரம்பலூா்- ஆலம்பாடி சாலையிலுள்ள பள்ளிவாசல் அருகே நிலை தடுமாறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.