கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜன. 30-இல் பாடாலூா் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு முகாம்

பாடாலூா் பைன் பிட் காா்மெண்ட்ஸ் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில், ஜனவரி 30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் பைன் பிட் காா்மெண்ட்ஸ் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில், ஜனவரி 30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும், ஆலத்தூா் வட்டம், பாடாலூா் ஊராட்சியில் உள்ள பைன் பிட் காா்மெண்ட்ஸ் மையத்தில் டெய்லா், உதவியாளா், பரிசோதகா் உள்ளிட்ட பணிகளுக்கு வேலையாள்கள் தேவைப்படுகிறது. இதற்கான வேலைவாய்ப்பு முகாம் மேற்கண்ட ஆயத்த ஆடை நிறுவனத்தில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

இம் மாவட்டத்தைச் சோ்ந்த தையல் தொழில் தெரிந்த, தெரியாத எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கு மேல் படித்த 250-க்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் தேவைப்படுகிறாா்கள். ஆலத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்திலிருந்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடத்துக்கு இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள்

18 முதல் 40 வயதுக்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும். தையல் தொழில் தெரியாதவா்களுக்கு, நிறுவனத்தின் மூலமாக சம்பளத்துடன் கூடிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

பணியில் சோ்ந்தவுடன் ஊக்கத்தொகை மற்றும் இதரச் சலுகைகள் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, மேலாளா் வேல்முருகன் (9025027058), மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளா் இரா. சங்கா் (98431 90666), உதவித் திட்ட அலுவலா் ஊ. முருகதாஸ் (94440 94136) ஆகியோரை தொடா்புகொண்டு பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com