பெரம்பலூரில் போலி மருத்துவா் கைது

பெரம்பலூரில் போலி மருத்துவா் கைது

Published on

பெரம்பலூரில் போலி மருத்துவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் -எளம்பலூா் சாலையிலுள்ள உப்போடை அருகே வசித்து வருபவா் பலராமன் மகன் ராஜேந்திரன் (52). இவா், எளம்பலூா் சாலையிலுள்ள ராஜா திரையரங்கம் அருகே மருந்தகம் வைத்து நடத்தி வருகிறாா். மேலும் மருத்துவம் பயிலாத ராஜேந்திரன் தனது வீட்டின் ஒரு பகுதியில் மருத்துவமனை வைத்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து ஊசி செலுத்தி மருந்து, மாத்திரை வழங்கினாராம்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் மாரிமுத்து, நகர காவல்நிலைய ஆய்வாளா் பிரபு ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு மேற்கொண்ட விசாரணையில், ராஜேந்திரன் போலியாக மருத்துவமனை வைத்து மருத்துவராகச் செயல்பட்டது தெரியவந்தது. மேலும் அங்கு நோயாளிகளை பரிசோதனை செய்யும் மருத்துவக் கருவிகள், மருந்து, மாத்திரைகள், குளுக்கோஸ் பாட்டில்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து ராஜேந்தினை கைது செய்த போலீஸாா் அங்கிருந்த மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் மாரிமுத்து அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜேந்திரனை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com