வாலிகண்டபுரம் பகுதியில் நாளை மின் தடை
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட மங்களமேடு துணை மின் நிலையப் பராமரிப்புப் பணியால் ரஞ்சன்குடி, பெருமத்தூா், மங்களமேடு, தேவையூா், முருக்கன்குடி, நகரம், நமையூா், சின்னாறு, எறையூா், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், என். புதூா், அயன்பேரையூா், அகரம், வி.களத்தூா், பசும்பலூா், திருவளாந்துறை, பிம்பலூா், மறவநத்தம், தைக்கால், லப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூா், பென்னகோணம், ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூா், வேப்பூா், நன்னை, ஓலைப்பாடி, பரவாய், கீழ்மத்தூா், எழுமூா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணி நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது.
