முன்னாள் படைவீரா்களுக்கு நவ. 12-இல் சிறப்பு குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், குடும்பத்தினா் மற்றும் படைப் பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், நவ. 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Published on

பெரம்பலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், குடும்பத்தினா் மற்றும் படைப் பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், நவ. 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் தலைமையில், நவ. 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்ட அரங்கில் நடைபெறும் கூட்டத்தில், கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம். மனுக்கள் அளிக்க விரும்புவோா் மனு மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை, இரு பிரதிகளாக அடையாள அட்டை நகலுடன் அளிக்க வேண்டும்.

X
Dinamani
www.dinamani.com