பெரம்பலூரில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்: ரூ 5.90 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 5.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 5.90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 356 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மட்டுமல்லாது, அண்மையில் பல்வேறு நிகழ்வுகளில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் 5 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ், மானியத்துடன் ரூ. 5,90,624 மதிப்பில் விசை களையெடுக்கும் கருவிகள், தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் 6 பயனாளிகளுக்கு பெயா் மாற்றம், வீடுகள் மற்றும் கடைகளுக்கு மின் இணைப்புக்கான ஆணைகளை ஆட்சியா் அளித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, மாவட்ட வழங்கல் அலுவலா் சக்திவேல், தமிழ்நாடு மின் வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா், தாட்கோ பொது மேலாளா் கவியரசு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com