வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படையினருக்கு நற்சான்றிதழ்

பெரம்பலூா் அருகே நகைக் கடையில் திருட முயன்ற 6 பேரை கண்டறிந்து, அவா்களை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீஸாரை,

News image
பெரம்பலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தனிப்படை போலீஸாரை செவ்வாய்க்கிழமை பாராட்டி நற்சான்றிதழ் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா.
Updated On :26 நவம்பர் 2025, 12:51 am

Syndication

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே நகைக் கடையில் திருட முயன்ற 6 பேரை கண்டறிந்து, அவா்களை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீஸாரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா செவ்வாய்க்கிழமை பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் உள்ள நகைக் கடையில், காவலாளியை தாக்கி கட்டிபோட்ட மா்ம கும்பல் கடையின் பூட்டை உடைத்து அண்மையில் திருட முயன்றனா். இதுகுறித்து, நகைக் கடை உரிமையாளா் கிஸோத் (36) அளித்த புகாரின்பேரில், பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின்பேரில் குற்றவாளிகளை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, தனிப்படை போலீஸாா் நகைக் கடையில் திருட முயன்ற 6 பேரை கடந்த 19-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்த தனிப்படை போலீஸாரை செவ்வாய்க்கிழமை பாராட்டி, நற்சான்றிதழ்கள் வழங்கினாா்.

இந் நிகழ்வில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபாலசந்திரன் (தலைமையிடம்), பாலமுருகன் (மதுவிலக்கு அமாலக்கப்பிரிவு) மற்றும் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.