ஒப்பனை, அழகுக்கலை பயிற்சிபெற இளைஞா்களுக்கு அழைப்பு

Published on

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், தலைசிறந்த தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் உள்ளிட்ட பயிற்சி பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தற்போது தலைசிறந்த தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

இப் பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்தவராகவும், 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தவராகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும், குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தொடா்ந்து 90 நாள்கள் அளிக்கப்படும் இப் பயிற்சியை, திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை ‘தாட்கோ’ மூலம் வழங்கப்படும்.

பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களை, பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தோ்வு செய்து அந் நிறுவனத்தின் சாா்பில் ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வருவாய் ஈட்ட வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இப் பயிற்சியில் பங்கேற்க ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் எனும் இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com