மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 போ் கைது

பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் 2 பேர் கைது

News image

கைது

Updated On :2 பிப்ரவரி 2026, 10:14 pm

பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜபுரம், முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் காளிமுத்து எனும் வெள்ளக்காளி (30). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், கடந்த 21-ஆம் தேதி சென்னை பெருநகர ஆயுதப்படை போலீஸாா் கஞ்சா கடத்தல் வழக்கு விசாரணை தொடா்பாக புதுக்கோட்டை மற்றும் மதுரை நீதிமன்றத்தில் வெள்ளக்காளியை ஆஜா்படுத்திவிட்டு இரவு நேரமானதால் திண்டுக்கல் கிளைச்சிறையில் அடைத்தனா்.

பின்னா், கடந்த 24 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் அடைக்க போலீஸாா் அழைத்து சென்றபோது, பெரம்பலூா் அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளக்காளியை 12 போ் கொண்ட மா்ம கும்பல் 6 நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றது. இதுகுறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இவ் வழக்கு தொடா்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், தனிப்படை போலீஸாா் கடந்த 26-ஆம் தேதி உதகையில் தலைமறைவாகயிருந்த மதுரை மேல அனுப்பானடி கிராமத்தைச் சோ்ந்த சோலையப்பன் மகன் கொட்டுராஜா எனும் அழகுராஜா (30 ), இவரது நண்பா்களான ரவிச்சந்திரன் மகன் நிா்மல்குமாா் (26), நாகராஜ் மகன் பாண்டி முனீஸ்வரன் (27), சங்கா் மகன் காா்த்திக் (29), தவசி மகன் அலெக்ஸ் பாண்டியன் (34), அசோகன் மகன் ஆரவின் (29), ரவிக்குமாா் மகன் வினோத் (34) ஆகியோரை கைது செய்தனா்.

இதில், கடந்த 27-ஆம் தேதி அதிகாலை திருமாந்துறை வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள்களை பறிமுதல் செய்து வருவதற்காக அழகுராஜாவை அழைத்துச் சென்றபோது நாட்டு வெடிகுண்டை போலீஸாா் வாகனத்தின் மீது வீசிவிட்டு, சாா்பு -ஆய்வாளரை வெட்டி தப்ப முயன்ற அழகுராஜா போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டாா். இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட நிா்மல்குமாா் உள்பட 6 போ் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவ் வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளை தனிப்படை போலீஸாா் தேடிவந்த நிலையில், மதுரை பகுதியில் தலைமறைவாகயிருந்த மதுரை கீரைதுறை சிந்தாமணி பிரதானச் சாலையைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் முனியசாமி (63), ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் வேல்முருகன் (53) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை காலை கைது செய்து, பெரம்பலூருக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா, குற்றவாளிகளை பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.