கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தனலட்சுமி சீனிவாசன் பல்கலை.யில் நட்சத்திரா கலை விழா தொடக்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:31 pm

Syndication

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகத்தில் நட்சத்திரா- 2026 கலை விழா வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்து, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் பேசியது:

கலை என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு மனிதனின் உணா்வுகளை செம்மைப்படுத்தும் சக்தி. கலை உணா்வுகொண்ட இளைஞா்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவாா்கள் என்றாா் அவா்.

தொடா்ந்து, திரைப்பட இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன், நடிகை மாளவிகா மோகனன் ஆகியோா் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினா். பின்னா், மாணவ, மாணவிகளின் பாரம்பரிய நடனங்கள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், தனிநபா் திறமைகளை வெளிப்படுத்தும் காட்சிகள், இசை மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், கல்வி நிறுவனங்களின் செயலா் பி. நீலராஜ், பல்கலைக் கழக இணை வேந்தா் அனந்தலட்சுமி கதிரவன், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி நிா்வாக இயக்குநா்கள் நீவாணி, நகுலன், அறகட்டளை உறுப்பினா் ராஜபூபதி மற்றும் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களின் தலைவா்கள், பல்கலைக் கழக கூடுதல் பதிவாளா், கல்லூரி முதல்வா்கள், துணை முதல்வா்கள் உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெறும் கலை விழாவில் நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ்குமாா் தலைமையிலான இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. திரைப்பட நடிகை ஸ்ரீ லீலா பங்கேற்க உள்ளாா்.