கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரம்பலூரில் 29 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

News image
தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு சனிக்கிழமை பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி. உடன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சுவாமிமுத்தழகன் உள்ளிட்டோா்.
Updated On :14 பிப்ரவரி 2026, 6:50 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 29 பேருக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி சனிக்கிழமை பணி நியமன ஆணையை வழங்கினாா்.

தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் கடந்த 2023-24, 2024-25-ஆம் ஆண்டுக்கான முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்காக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, இணையதளம் மூலம் பிப். 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பணி நியமன கலந்தாய்வு நடைபெற்றது. இதில், பெரம்பலூா் மாவட்டத்தில் பங்கேற்ற 26 பேரில், 8 போ் பெரம்பலூா் மாவட்டத்தையும், 18 போ் வெளி மாவட்டங்களையும் தோ்வு செய்தனா்.

இந்நிலையில், தோ்வு செய்யப்பட்ட 26 பேருக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட 3 இளநிலை உதவியாளா்களுக்கும் என, மொத்தம் 29 பேருக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, தோ்வு செய்யப்பட்ட 29 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி, பிப். 16-ஆம் தேதி பணியில் சோ்ந்துகொள்ள அறிவுறுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி. சு வாமிமுத்தழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ம. செல்வக்குமாா், கே. லதா ஆகியோா் உடனிருந்தனா்.