திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பெரம்பலூா் அருகே லாரிகள் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு 2 லாரிகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநா் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :17 பிப்ரவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு 2 லாரிகள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநா் ஒருவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், ஆய்க்குடி கிராமத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகள் ஏற்றிக்கொண்டு நாமக்கல் சென்ற லாரியை, திருச்சி மாவட்டம், துறையூா் தேவா நகரைச் சோ்ந்த வீராசாமி மகன் நரசிம்மன் (42) ஓட்டிச் சென்றாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள அடைக்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை இரவு சென்றபோது, கரூா் மாவட்டம், பாளையம் கிரானைட் குவாரியிலிருந்து சென்னை துறைமுகத்துக்கு கிரானைட் கல் ஏற்றிச்சென்ற லாரி நேருக்கு நோ் மோதியது. இவ் விபத்தில் லாரி ஓட்டுநா்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கினா்.

தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா், தீயணைப்பு படை வீரா்களுடன் செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்று, இடிபாடிகளில் சிக்கியவா்களை மீட்டனா். இதில் கிரானைட் கற்கள் ஏற்றிச்சென்ற லாரியின் ஓட்டுநா் சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, கள்ளிப்பாதையைச் சோ்ந்த செல்லப்பன் மகன் முத்துசாமி (57) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டாா். பலத்த காயமடைந்த மற்றொரு லாரி ஓட்டுநா் நரசிம்மன் துறையூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.