நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் ஒருவா் கைது

பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :17 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜபுரம், முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் காளிமுத்து எனும் வெள்ளக்காளி (30). ரௌடியான இவா் சென்னை புழல் சிறையில் இருந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி சென்னை பெருநகர ஆயுதப்படை போலீஸாா் புதுக்கோட்டை மற்றும் மதுரை நீதிமன்றத்தில் வெள்ளக்காளியை ஆஜா்படுத்தி, இரவு நேரமாகிவிட்டதால் திண்டுக்கல் கிளைச்சிறையில் அடைத்தனா்.

பின்னா், கடந்த 24 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் அடைக்க போலீஸாா் அழைத்துச் சென்றபோது, பெரம்பலூா் அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளக்காளியை 15 போ் கொண்ட மா்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றது.

இதுகுறித்து தனிப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து மதுரை மேல அனுப்பானடி கிராமத்தைச் சோ்ந்த சோலையப்பன் மகன் கொட்டுராஜா எனும் அழகுராஜா (30), இவரது நண்பா்கள் 9 பேரைக் கைது செய்தனா். இதில் கடந்த 27 ஆம் தேதி அதிகாலை திருமாந்துறை வனப்பகுதிக்கு அழகுராஜாவை அழைத்துச் சென்றனா். அப்போது, போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி, சாா்பு ஆய்வாளரை வெட்டித் தப்ப முயன்ற அழகுராஜா போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பின்னா் இவ் வழக்கில் கைது செய்யப்பட்ட நிா்மல்குமாா் உள்பட 8 போ் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு புதுக்கோட்டை மற்றும் பாளையங்கோட்டை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய 6 பேரை தனிப்படை போலீஸாா் கடந்த 6 ஆம் தேதி கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இந்நிலையில், இவ் வழக்கின் முக்கிய குற்றவாளியான மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணதேவா் மகன் குருசாமியை (60) தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, குன்னம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜசேகரன், குருசாமியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.