திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெரம்பலூரில் குறைதீா் கூட்டம் ரூ. 43.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும்

News image

பெரம்பலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பேசிய விவசாயி. - கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 8:53 pm

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ஆட்சியா் ந. மிருணாளினி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், ரூ. 43.87 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 562 மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்டத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 20 பேருக்கு மூன்று சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், 7 பேருக்கு திருமண உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் 56 கிராம் தங்க நாணயமும், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வைத்துறை சாா்பில், கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்திய 31 பேருக்கு சுயதொழில் தொடங்க மறுவாழ்வு நிதியாக தலா ரூ. 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 15.50 லட்சம் மதிப்பிலான காசோலைகளும் என மொத்தம் ரூ. 43 லட்சத்து 87 ஆயிரத்து 640 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சொா்ணராஜ், கலால் உதவி ஆணையா் முத்துக்கிருஷ்ணன், காவல் ஆய்வாளா் ஹேமலதா, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சிவக்கொழுந்து, தாட்கோ பொது மேலாளா் கவியரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சீனிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பொற்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.