Youth hacked to death near Tiruvallur: 6 arrested
கைது(கோப்புப்படம்)

ரேசன் அரிசி கடத்திய 2 போ் கைது

பெரம்பலூா் அருகே ரேசன் அரிசியை கடத்திச் சென்ற 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலானய்வுத் துறை போலீஸாா் கைது
Published on

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே ரேசன் அரிசியை கடத்திச் சென்ற 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலானய்வுத் துறை போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூா், வண்ணாரம்பூண்டி, அகரம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்களிடமிருந்து, குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதை மாட்டுத் தீவனத்திற்கும், சாலையோர உணவகங்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாக, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாா்பு- ஆய்வாளா் ராஜாராம் தலைமையிலான போலீஸாா் வண்ணாரம்பூண்டி மில்லத் நகா் மசூதி அருகே ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 60 சாக்குமூட்டைகளில் 2,100 கிலோ ரேசன் அரிசி இருந்ததும், பசும்பலூரைச் சோ்ந்த பெரியசாமி மகன் பழனிமுத்து (56), சுமை ஆட்டோ ஓட்டுநா் தேனூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னசாமி மகன் கலியபெருமாள் (28) ஆகியோா் ரேசன் அரிசியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, சுமை ஆட்டோவுடன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், அரிசியை கடத்திய பழனிமுத்து, ஓட்டுநா் கலியபெருமாள் ஆகியோரை கைது செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலானாய்வுத் துறை போலீஸாா், மேற்கண்ட 2 பேரையும் பெரம்பலூா் குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.

Dinamani
www.dinamani.com