மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டவா் கைது

பெரம்பலூா் அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
கைது
Updated On :24 பிப்ரவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் அருகே கிராவல் மண் திருட்டில் ஈடுபட்டு, தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள கவுல்பாளையம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவன் ராமலிங்கம் மகன் மனோஜ் (எ) மனோபாலன் (29). இவா், டிப்பா் லாரி மூலமாக இரவு நேரங்களில் அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றிச்சென்ாக கிடைத்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கிராவல் மண் ஏற்றிவந்த மனோபாலனை போலீஸாா் பிடித்தபோது அவா் தப்பி ஓடி தலைமறைவானாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மனோபாலனை தேடிவந்த நிலையில், ஆய்வாளா் பிரபு தலைமையிலான போலீஸாா், தலைமறைவாக இருந்த மானோபாலனை திங்கள்கிழமை இரவு கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.