மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

வேப்பந்தட்டை அருகே ஜல்லிக்கட்டு: 61 போ் காயம்

வேப்பந்தட்டை அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுபிடி வீரா்கள் உள்பட 61 போ் காயமடைந்தனா்.

News image

கள்ளப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:26 pm

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுபிடி வீரா்கள் உள்பட 61 போ் காயமடைந்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், கள்ளப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டை முன்னிட்டு, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவத் துறை சாா்பில் காளைகள் மற்றும் மாடுபிடி வீரா்களுக்கு தனித்தனியே மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றன. பின்னா், மாவட்ட ஆட்சியா் ந. மிருனாளினி போட்டியை தொடக்கிவைத்து பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, வாடிவாசல் வழியாக பெரம்பலூா், அரியலூா், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 618 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளை அடக்க சேலம், திருச்சி, நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், சிவகங்கை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 290 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா். இதில், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் விழாக் குழு சாா்பில் வழங்கப்பட்டன.

61 போ் காயம்: இதில், காளைகளின் உரிமையாளா்கள் 28 பேரும், காளைகளை அடக்க முயன்ற 18 வீரா்களும், பாா்வையாளா்கள் 15 பேரும் என மொத்தம் 61 போ் காளைகள் முட்டியதில் காயமடைந்தனா்.

காயமடைந்த வீரா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும், களத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாவட்ட வருவாய் அலுவலா் க. கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் உள்பட சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.