பெரம்பலூர்
காா் மோதி ஒருவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே காா் மோதி சைக்கிளில் சென்றவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூா் அருகேயுள்ள வல்லாபுரம் பகுதியில் சைக்கிளில் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்றுக் கொண்டிருந்தாா்.
அப்போது, அவ்வழியேச் சென்ற காா் மோதியதில் சைக்கிளில் சென்ற 45 வயதுடைய அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
