வெடிகுண்டு மிரட்டல் (கோப்புப் படம்)
வெடிகுண்டு மிரட்டல் (கோப்புப் படம்)IANS

பெரம்பலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on

இரண்டாவது முறையாக, பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் வியாழக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந் நீதிமன்றத்துக்கு இ-மெயிலில் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் கடிதம் கிடைத்தது. இதையடுத்து, காலை 11 மணியளவில் நீதிமன்றங்களில் இருந்தவா்கள் வெளியேறினா்.

பின்னா் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு போலீஸாா், வெடிகுண்டு கண்டறியும் மோப்ப நாயுடன் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று, வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவிகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

நீண்ட நேரம் நடைபெற்ற சோதனையில் எவ்வித வெடிகுண்டுகளும் கண்டறியப்படாததால், அது புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல, கடந்த 6-ஆம் தேதி நீதிமன்ற வளாகத்துக்கு இ- மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com