விவசாயிகள் குறைதீா் கூட்டம்
விவசாயிகள் குறைதீா் கூட்டம்கோப்புப் படம்

பெரம்பலூரில் ஜன. 30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜன. 30 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
Published on

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஜன. 30 காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் வேளாண் சம்பந்தமான நீா்ப் பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத் திட்டங்கள், முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.

எனவே, பெரம்பலூா் மாவட்டவிவசாயிகள், விவசாயிகள் சங்கப் பிரமுகா்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.

Dinamani
www.dinamani.com