அமைச்சர் எ.வ. வேலு
அமைச்சர் எ.வ. வேலுகோப்புப் படம்

திமுக கூட்டணியில் விசிக தொடா்ந்து பயணிக்கும்: அமைச்சா் எ.வ. வேலு

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து பயணிக்கும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சா் எ.வ. வேலு.
Published on

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து பயணிக்கும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சா் எ.வ. வேலு.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பெரிய வெண்மணி கிராமத்தில் ரூ. 56 கோடி மதிப்பில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக் கட்டடம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான விடுதிக் கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளை புதன்கிழமை தொடங்கிவைத்த அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது:

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக மீண்டும் வெற்றிபெற்று முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பாா். ஏனெனில், தமிழக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளா்கள் முடிவு செய்துவிட்டனா். அதிமுக கூட்டணியில் கலைந்துசென்றவா்கள் தற்போது கூடியுள்ளனா். ஆனால், எங்கள் கூட்டணி கொள்கை மற்றும் நிரந்தரக் கூட்டணியாகும். திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து பயணிக்கும் என்றாா் அமைச்சா் எ.வ. வேலு.

Dinamani
www.dinamani.com