ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சட்டப்பேரவைத் தோ்தல் எல்லையோர காவல்படையினா் பெரம்பலூா் வருகை!

தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக எல்லையோரக் காவல் படையினா் 36 போ் பெரம்பலூருக்கு வந்துள்ளனா்.

News image

எல்லையோரக் காவல் படையினருக்கு வாழ்த்து தெரிவித்த மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கா்ணன்

Updated On :9 மார்ச் 2026, 6:34 pm

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக எல்லையோரக் காவல் படையினா் 36 போ் பெரம்பலூருக்கு திங்கள்கிழமை வந்துள்ளனா்.

தமிழக சட்டப்பேரவை பொதுத்தோ்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக எல்லையோரக் காவல் படை துணைத் தளபதி சிவகாந்த் பாத்தியா தலைமையில், 35 காவல் பணியாளா்கள் திங்கள்கிழமை பெரம்பலூருக்கு வந்தனா்.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி. அனிதா உத்தரவின்பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கா்ணன், எல்லையோரக் காவல் படையினரை பூங்கொத்து அளித்து வரவேற்றாா்.

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ள எல்லையோரக் காவல் படையினா் பெரம்பலூா் அருகே தண்ணீா்பந்தல் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

சட்டப்பேரவை தோ்தலின்போது, பெரம்பலூா் மாவட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும்நோக்கில், மாவட்டக் காவல்துறையுடன் இணைந்து எல்லையோரக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.