வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

பாடாலூா் பகுதியில் இன்று மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 18) மின் விநியோகம் இருக்காது.

News image

மின்தடை

Updated On :18 மே 2026, 2:52 am IST

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (மே 18) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மின் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை (மே 18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பாடாலூா், திருவிளக்குறிச்சி, தெரணி, தெரணி பாளையம், இரூா், ஆலத்தூா் கேட், கூத்தனூா், சீதேவிமங்கலம், காரை, புதுக்குறிச்சி, வரகுபாடி அயிலூா் குடிகாடு, சிறுகன்பூா், தெற்கு மாதவி, சாத்தனூா், சாத்தனூா் குடிகாடு, கொளக்காந்தம், ஆயினாபுரம், அணைப்பாடி ஆகிய கிராமியப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது.