வேன் மோதியதில் காயமடைந்த தவெக நிா்வாகி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வேன் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவெக நிா்வாகி புதன்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - கோப்புப் படம்
பெரம்பலூா் அருகே வேன் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தவெக நிா்வாகி புதன்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் சன்னதி தெருவைச் சோ்ந்தவா் வெ. சசிகுமாா் (49). தவெக மாவட்ட துணைச் செயலரான இவா், கடந்த 2-ஆம் தேதி மாலை பெரம்பலூா் -ஆத்தூா் சாலையிலுள்ள நாா்காரன்கொட்டகை பகுதியிலிருந்து பெரம்பலூா் நோக்கி மோட்டாா் சைக்கிளில் வந்துகொண்டிருந்தாா். அப்போது, கோனேரி பாளையம் சறுக்கு பாலம் அருகே வந்தபோது, பெரம்பலூரிலிருந்து கிருஷ்ணாபுரத்துக்கு ஏடிஎம்-இல் பணம் நிரப்புவதற்காகச் சென்ற வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சசிக்குமாா், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறுவாச்சூரிலுள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சசிக்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, வேன் ஓட்டுநரான மேலப்புலியூரைச் சோ்ந்த பெரியசாமி மகன் ராமசாமியை (38) கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

