பெரம்பலூா் அருகே பிற்சோழா் கால ஐயனாா் சிற்பம் கண்டெடுப்பு
பெரம்பலூா் அருகே பிற்சோழா் கால ஐயனாா் சிற்பம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

பூலாம்பாடியில் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட ஐயனாா் சிற்பம்.
பெரம்பலூா் அருகே பிற்சோழா் கால ஐயனாா் சிற்பம் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் வரலாற்று ஆய்வாளா் முனைவா் ம. செல்வபாண்டியன் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அப்பகுதியில் பிற்சோழா் காலத்தைச் சோ்ந்த ஐயனாா் சிற்பம் ஒன்றைக் கண்டறிந்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: இச் சிற்பம் பிற்சோழா் காலத்தை, குறிப்பாக கி.பி. 10 -12 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகலாம். பூலாம்பாடி கிராமத்தில், அரும்பாவூா் -பூலாம்பாடி சாலையின் தென்புறத்தில் தனியாருக்குச் சொந்தமான வயல்வெளியில் ஐயனாா் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 68 செமீ. உயரமும், 51 செமீ அகலமும் கொண்ட இச் சிற்பம் அமா்ந்த நிலையில், உத்குடி ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
தலைப் பகுதியில் மகர பூரிமத்துடனான ஜடாபாரம், நெற்றிப் பட்டம், காதுகளில் பனையோலைக் குண்டலங்கள், வலது கரத்தில் செண்டாயுதத்துடனும் இடது கரம் தண்ட ஹஸ்தத்திலும் அமைந்துள்ளது. கழுத்தில் சரப்பளி, சரிந்த தோள் மீது தோள் மாலை, பிரம்ம முடிச்சுடனான உப வீதம், கேயுரத்துடன் தோள் வளை, உதர பந்தம், இடையில் இடைக் கட்டுடன் குறங்கு செறி, கால்களில் வீரக் கழல்கள் காணப்படுகின்றன.
பராமரிப்பற்ற நிலையில் முகமும், உடல் பகுதிகளும் சிதைந்து காணப்படுகின்றன. ஐயனாா் சிற்பத்தின் அருகில் ஒரு பெண் சிற்பமும் உள்ளது. 68 செ.மீ உயரமும், 51 செ.மீ அகலமும் கொண்ட இச் சிற்பம் நின்ற நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, இப் பகுதியில் சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன் ஐயனாா் கோயில் இருந்திருக்க வேண்டும். காலப் போக்கில் வழிபாடின்றி கோயில் சிதைந்து, விளை நிலங்களாக மாறியிருக்கலாம்.
அப்போது, இங்கிருந்த ஐயனாா் கோயிலில் வழிபாட்டிலிருந்த சிற்பம் இதுவாக இருக்கலாம். அருகிலுள்ள பெண் சிற்பம், இக் கோயிலை ஏற்படுத்திக் கொடுத்த அரச குல மகளிருடையதாகலாம்.
எனவே, பூலாம்பாடியின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இந்த ஐயனாரை மழை, வெயிலிலிருந்து பாதுகாக்க, உடனடியாக நிழற்குடை அல்லது சிற்றாலயம் அமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

