
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் பெண் மனு
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் பெண் ஒருவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் பெண் ஒருவர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆட்சியரிடம் தவுலத்தின்ஷா அளித்த மனு விவரம்: ஆவுடையார்கோவில் அருகேயுள்ள களபம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுவாபிச்சை என்பவருடன் கடந்த 2013-ல் திருமணம் நடந்து எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவர் காட்டுவாபிச்சை வேலைக்காக குவைத் நாட்டுக்கு சென்றுவிட்டார். அப்போது, சொத்துப் பிரிப்பதில் பிரச்னை ஏற்பட்டது.
அதில், எனது கணவர் வீட்டார் என்னையும், எனது குழந்தையையும் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். மேலும், இஸ்லாமிய முறைப்படி என்னை விவாகரத்து செய்துவிட்டாகவும் கூறுகின்றனர். இதுகுறித்து எனது கணவர் வீட்டார், ஜமாத் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலமுறை கரூர் காவல் நிலையம், அறந்தாங்கி மகளிர் காவல்நிலையம் ஆகியவற்றில் புகார் மனு அளித்தும் விசாரிக்க மறுத்துவிட்டனர். தற்போது வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வந்துள்ள எனது கணவரையும், என்னையும் சந்திக்க விடாமல் மறைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.
மனுதாரர் தவுலத்தின்ஷாவிடம் திருக்கோகர்ணம் போலீஸார் விசாசரணை நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு: சிறப்பு அதிகாரிகளை நியமிக்க அரசுக்கு பரிந்துரை

ஜேஇஇ தோ்வு: 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெண்கள் தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு




