அமல அன்னை மெட்ரிக் பள்ளியில் நூல் வெளியீட்டு விழா

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் "மானுடம் ஈர்த்த மாதர்கள்' எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் "மானுடம் ஈர்த்த மாதர்கள்' எனும் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் முதல்வர் ச.ம. மரிய புஷ்பம் தலைமை வகித்தார். ஆசிரியர் இரா. பிரின்ஸ், நூல் அறிமுக உரையாற்றினார். ஆசிரியை இரா. அமராவதி வரவேற்றார்.மதிமுக மாநில மருத்துவர் அணி துணைச் செயலர் மருத்துவர் மு. சின்னப்பா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இப்பள்ளியின் ஆசிரியர் ஜோ. சலோ எழுதிய கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் கவனத்தை ஈர்த்த நம் சமகாலத்திய பெண் போராளிகள் ஆங் சான் சூகி, இரோம் ஷர்மிளா, மலாலா யூசபாய் ஆகியோரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை வரலாற்றை விளக்கும் "மானுடம் ஈர்த்த மாதர்கள்' எனும் நூலை வெளியிட, அதை தமிழ் உணர்வாளர் அ. முத்து மற்றும் முத்தமிழ்ப் பாசறை அறங்காவலர் பெ. சதாசிவம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

தொட்டியம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ச. சோலையப்பன், மாவட்ட தமிழாசிரியர் மன்றத் தலைவர் கு.ம. திருப்பதி, ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்பின் தலைவர் பெ. மாரிமுத்து, முத்தமிழ்ப் பாசறை அறங்காவலர் நெ.ரா. சந்திரன் வாழ்த்திப் பேசினர். நூலாசிரியர் ஜோ. சலோ ஏற்புரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com