"உலகெங்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் பணியில் மின்னூல் முக்கியப் பங்காற்றுகிறது'

உலகெங்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் பணியில் மின்னூல் முக்கியப்பங்காற்றுகிறது என்றார் பெங்களூர் புஸ்தகா மின்னூல் நிறுவன இயக்குநர் பத்மநாபன்.
Updated on
1 min read

உலகெங்கும் தமிழைக் கொண்டு சேர்க்கும் பணியில் மின்னூல் முக்கியப்பங்காற்றுகிறது என்றார் பெங்களூர் புஸ்தகா மின்னூல் நிறுவன இயக்குநர் பத்மநாபன்.
புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச்சங்கம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நா. முத்துநிலவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மின்னூல் வழிகாட்டு முகாமில் அவர் மேலும் பேசியது:
ஜெயகாந்தன், அசோகமித்திரன், புவியரசு, வைரமுத்து, சிவசங்கரி, ஆண்டாள் பிரியதர்ஷினி, பாரதிபாஸ்கர், இந்திரா
செளந்தர்ராஜன், உள்ளிட்ட சுமார் 1200 தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்களைத் தமது நிறுவனம் அச்சுநூல் வடிவிலிருந்து, மின்னூலாக்கி உலகத்தமிழர்கள் படிக்கத் தந்துள்ளது. தமிழ்ப் படைப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்ப்பது மின்னூல் என்றும் புதுக்கோட்டையிலிருந்து எழுதிவரும் எழுத்தாளர்கள் பயன்பெற அதற்கான முயற்சியை கணினித் தமிழ்ச் சங்கம் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.
இதையடுத்து முனைவர் ராஜேஷ் தேவதாஸ் பேசுகையில், நவீன தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் மின்னூல் வழியாக, ஆசியா தவிரவும் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பாக் கண்டங்களிலுள்ள சுமார் 120 நாடுகளில் படிக்கப்படுவதாகவும், தமிழ் எழுத்தாளர் அனைவரும் தமது படைப்புகள், சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்ற பாரதியின் கனவு நினைவாக மின்னூல் வடிவம் பெறுவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
இதையடுத்து, கவிஞர் தங்கம் மூர்த்தி, தயானந்த சந்திரசேகரன், மருத்துவர் ஜெயராமன், செம்பை மணவாளன், ஆர்.நீலா, பொன்.கருப்பையா, வி.கே. கஸ்தூரிநாதன், எஸ். இளங்கோ, சுவாதி
உள்ளிட்ட 40 எழுத்தாளர்களின் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ்க் கவிதை, சிறுகதை, கட்டுரை, நாடக சமூக ஆய்வு நூல்கள் மின்னூல் வடிவில் மாற்றுவற்கான ஒப்புதலுடன் ஒப்படைக்கப்பட்டன.
இதில், திருச்சி, தஞ்சை, மதுரை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com