புதுகை நகராட்சிக்குள்பட்ட கிழக்கு 2 ஆம் வீதி வடக்கு 2 ஆம் வீதி சந்திப்பில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
புதுக்கோட்டை நகரம் மன்னர் காலத்தில் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரமாகும். புதுக்கோட்டை நகராட்சி நூற்றாண்டு விழா கண்ட நகராட்சி ஆகும். தற்போது 42 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் துப்பரவு பணியாளர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுகை நகராட்சி கிழக்கு 2 ஆம் வீதி வடக்கு 2 ஆம் வீதி சந்திப்பு, அடப்பன் வயல், கனரா வங்கி சந்து ஆகிய பகுதிகளில் குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் அந்தப் பகுதியில் தூர்நாற்றும் வீசுகின்றது. மேலும் இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதியினர் முறையிட்டபோது, லாரிகள் மூலம் குப்பைகளை அள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால் இதுநாள் வரை குப்பைகள் அகற்கப்படவில்லை.
நகராட்சியில் சுமார் ரூ. 9 கோடியில் திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக குப்பைக்கு குட்பை திட்டமும் தொடங்கப்பட்டு சுமார் 280-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். எனினும் துப்புரவு பணிகளில் தொய்வு நிலையே நீடிப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.