பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆவணப்படம் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு ஒலியமங்கலம் பங்குத்தந்தை சவரி சேசுராஜ் தலைமைவகித்தார். தொட்டியம்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் ச. சோலையப்பன் முன்னிலை வகித்தார். விழாவில், பள்ளி ஆசிரியர்கள் ஆர். பிரின்ஸ், ஜோ. சலோ ஆகியோர் தயாரித்த அருள்சகோதரி மரியபுஷ்பத்தின் கல்விச்சேவையை விளக்கும் கண்ணெதிரே ஒரு போதிமரம் எனும் ஆவணப்பட குறுந்தகட்டை மருத்துவர் மு. சின்னப்பா வெளியிட மருத்துவர் ஆ. அழகேசன் பெற்றுக்கொண்டார். ஆசிரியர் செ. பாலமுரளி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.