புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
செரியலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை, இலக்கிய நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கீரமங்கலம் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து, சாலை விதிகள் பற்றியும், விபத்தில்லா பயணங்கள் குறித்தும், போக்குவரத்து சமிக்கைகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.இதில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.