கந்தர்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் குடமுழுக்கு கடந்த பிப்.10-ல் நடைபெற்றதைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன. 48ஆம் நாள் மண்டல அபிஷேக நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு யாகபூஜைகள், பால், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.