குழந்தை விழுங்கிய பேட்டரி அகற்றம்
By DIN | Published On : 01st April 2019 09:05 AM | Last Updated : 01st April 2019 09:05 AM | அ+அ அ- |

2 வயதுக் குழந்தை முழுங்கிய பேட்டரி எண்டாஸ்கோப்பி முறை மூலம் அகற்றப்பட்டது.
பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் சேதுராமன் மகள் ஸ்ரீமதி (2) ஞாயிற்றுக்கிழமை மூச்சுவிட சிரமப்பட்டார். இதையடுத்து பொன்னமராவதி துர்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு எஸ்க்ரே எடுத்துப் பார்த்தபோது மூச்சுக்குழாய் பகுதியில் பொம்மையில் உள்ள சிறிய வட்டப் பேட்டரி இருந்தது தெரியவந்தது. உடனடியாக மருத்துவர் அ. அழகேசன் தலைமையிலான குழுவினர் எண்டோஸ்கோப்பி முறை மூலம் அந்த பேட்டரியை அகற்றினர். குழந்தை தற்போது நலமுடன் உள்ளது.