தேர்தல் விழிப்புணர்வுக்காக கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 01st April 2019 09:08 AM | Last Updated : 01st April 2019 09:08 AM | அ+அ அ- |

தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கை நோக்கிய தேர்தல் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம் கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கந்தர்வகோட்டையில் தேர்தல் வாக்குப் பதிவை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களிடம் தேர்தல் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் கந்தர்வகோட்டை வட்டாட்சியரும் தேர்தல் அலுவலருமான ஜி . கலைமணி தலைமையில் தேர்தலில் அனைத்து வாக்காளரையும் வாக்களிக்க செய்வோம் என்ற வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வகணபதி, வருவாய் அலுவலர்கள் தெ. கருப்பையா, கருணாநிதி, அ. வீரபாண்டியன், குமார், பொதுமக்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.