புற்றடி மகாசக்தி மாரியம்மனுக்கு பறவைக்காவடி
By DIN | Published On : 01st April 2019 09:07 AM | Last Updated : 01st April 2019 09:07 AM | அ+அ அ- |

புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் பாரதியார் நகரிலுள்ள ஸ்ரீ புற்றடி மகாசக்தி மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்தனர்.
இக்கோயில் பங்குனித் திருவிழா கடந்த 24ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் அலகு குத்திக் கொண்டும், பால்காவடி எடுத்துக் கொண்டும் ஊர்வலமாக வந்தனர். இவர்களில் குறிப்பாக சிலர் பறவைக் காவடியாக முதுகில் கம்பி குத்தப்பட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டு வந்தனர்.
மாலை அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். விழாவில், வேப்பங்குடி, தோப்புக்கொல்லை முகாம், வம்பன் நான்கு சாலை, கிடக்காடு, அழகாம்பாள்புரம், நம்பனேஸ்வரன், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள்பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் எம். விஸ்வநாதன், விழாக் குழுத் தலைவர் பி. புஷ்பராஜ், செயலர் ஆர். சத்தியசீலன், பொருளாளர் எம். சுந்தரேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.