போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு
By DIN | Published On : 01st April 2019 09:07 AM | Last Updated : 01st April 2019 09:07 AM | அ+அ அ- |

பொன்னமராவதி அருகே உள்ள வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை நடந்த ஆண்டு விழாவில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
பள்ளிதாளாளர் விஎஎஸ்டி.பிஎல். வள்ளியம்மை தலைமை வகித்தார். இயக்குநர் விஎஸ்டி. பிஎல். சிதம்பரம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் வே. முருகேசன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் கே. வைதேகி அறிமுக உரையாற்றினார்.
விழாவில் ரோட்டரி மாவட்ட (3000) முன்னாள் ஆளுநர் பி. கோபாலகிருஷ்ணன், ரோட்டரி முதல் பெண்மணி நீலாவதி கோபாலகிருஷ்ணன்
ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி வாழ்த்தினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாக இயக்குநர் நெ. ராமச்சந்திரன் நன்றி கூறினார்.