விபத்தில் தொழிலாளி பலி: தனியார் பேருந்து சிறைபிடிப்பு
By DIN | Published On : 11th April 2019 08:34 AM | Last Updated : 11th April 2019 08:34 AM | அ+அ அ- |

பொன்னமராவதி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில் ஹோட்டல் தொழிலாளி உயிரிழந்தார். இதையடுத்து, பொதுமக்கள் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கோவனூரைச் சேர்ந்தவர் ப. சங்கர். புதுக்கோட்டை - பொன்னமராவதி சாலையில் செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றபோது செவலூர் விளக்கு அருகே எதிரே வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சங்கரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, அதே நிறுவனத்தைச் சார்ந்த பேருந்தை சிறைப்பிடித்தனர். தொடர்ந்து பொன்னமராவதி வட்டாட்சியர் ஆர். பாலகிருஷ்ணன் மற்றும் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G